சா .தேவதாஸ் எழுதிய ‘பகத் சிங்: பாரதத்தின் சிங்கம்’ என்ற கட்டுரையைப் படித்தேன். 1930-ம் ஆண்டு காந்தி - இர்வின் உடன்படிக்கையின்படி ஆங்கிலேய அரசால் விடுவிக்கப்பட வேண்டிய அரசியல் கைதிகளின் பட்டியலில் மகாத்மா காந்தி, மாவீரன் பகத் சிங்கின் பெயரையும் சேர்த்து அரசிடம் அளித்திருந்தார். ஆனால், பகத் சிங்கை ஒழித்துவிட வேண்டுமென்ற நோக்கத்துடன் அந்தப் பட்டியலிலிருந்து பகத் சிங்கின் பெயரை நீக்கிவிட்டது ஆங்கிலேய அரசு.
தான் செய்யவிருந்ததில் ஆயிரத்தில் ஒரு பகுதியைக்கூடச் செய்ய இயலாமல் போய்விட்டது என்ற கவலையோடுதான் தூக்குக் கயிற்றை முத்தமிட்டார் ‘பாரதத்தின் சிங்கம்' பகத் சிங். உலகமே நினைவில் வைத்துப் போற்றும் பகத் சிங்கின் மரணமே மரணங்களில் சிறந்தது!
- கே.பி.எச். முகம்மது முஸ்தபா,திருநெல்வேலி.