இப்படிக்கு இவர்கள்

உயிர் பறிப்புத் துறை?

செய்திப்பிரிவு

‘காவல் நிலையத்தில் விசாரணையின்போது மோதல், எஸ்.ஐ. சுட்டதில் இளைஞர் பலி’ செய்தி படித்தேன். உயிரின் மதிப்பு அவ்வளவு எளிதாகிவிட்டதா? அல்லது மனித நேயம் என்பதே முற்றிலும் இல்லாமல்போய்விட்டதா? முட்டிக்குக் கீழே சுட வேண்டிய காவலர், உயிர்போகும் அளவுக்குச் சுட்டது ஏன்? மக்களின் உயிரைக் காப்பதற்குத்தானே காவல்துறை? பின் ஏன் உயிரைப் பறிக்க வேண்டும்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நியாயமான முறையில் பதில் சொல்லுமா காவல் துறை?

- ஷேக் மும்கமது,மாரியூர்.

SCROLL FOR NEXT