‘மெல்லத் தமிழன் இனி..!’ பகுதியில் குடிப்பதால் ஏற்படும் இருதுருவ மனநிலைக் கோளாறு அதிரவைக்கிறது. தீபாவளி நெருங்க நெருங்க வீட்டுக்குத் தேவையான பொருட்களைக்கூட வாங்க இயலாமல் தள்ளாடும் குடும்பங்களை நினைத்தால் வயிறு எரிகிறது. விதவிதமாக உடை அணிய வேண்டிய அந்தக் குடும்பக் குழந்தைகள் புத்தாடை இல்லாமல் புலம்புவது கேட்கவில்லையா? தீபாவளிக்கு மது விற்பனை இலக்கு பல நூறு கோடி ரூபாய் நிர்ணயிக்கும் அரசுகள் யாருக்காக? மக்களால் மக்களுக்காக என்றால், மக்களாட்சிக்கு இது வெகுமானம் அல்ல, அவமானம்!
- கூத்தப்பாடி மா. கோவிந்தசாமி,தருமபுரி.