எங்கள் வகுப்பின் ‘கலைக் களஞ்சியம்’ என்று என்னை அழைப்பார்கள். அதற்குக் காரணம் ‘தி இந்து’தான். நான் தினமும் ‘தி இந்து’ நாளிதழைப் படிக்கிறேன். அதில் வரும் சிறப்பு இணைப்பிதழ்களான ‘பெண் இன்று’, ‘வெற்றிக்கொடி’, ‘உயிர்மூச்சு’, ‘நலம் வாழ’, ‘இளமை புதுமை’- இவையெல்லாம் நான் விரும்பிப் படிப்பவை. குறிப்பாக, மாயா பஜார் பகுதியில் வெளியாகும் விடுகதைகள், குழந்தைப் பாடல், அதிசய உலகம், தெரியுமா? உயிரினம் கண்டுபிடி, நீங்களே செய்யலாம், மனக் கணக்கு, நம்ப முடிகிறதா? ஆகியவற்றை மிகவும் விரும்பிப் படிப்பேன்.
மேலும், ‘மாயா பஜார்’ உதவியுடன், நாக்கின் நிறம் மாற்றும் பழம், புத்திசாலிக் குரங்கு, தண்ணீரால் ஆன பிராணி, சூரிய புராணம், பிரமிடுகள் பலவிதம் ஆகிய செய்திகளைத் தெரிந்துகொண்டேன். தெரிந்துகொண்டதை என் வகுப்புத் தோழர்களிடமும் பகிர்ந்துகொள்வேன். ஆசிரியரும் நண்பர்களும் என்னைப் பாராட்டுவார்கள்.
- கார்த்திகா, 10-ம் வகுப்பு,எஸ்ஆர்வி பள்ளி, சமயபுரம், திருச்சி.