‘அரசுப் பள்ளி காவலாளி பணிக்கு, கூட்டுறவு அமைச்சர், எம்எல்ஏ-க்கள்’ கடிதம் என்ற செய்தியைப் படித்தேன். தமிழ்நாட்டில் அரசுப் பணிக்கு எப்படியெல்லாம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதுபற்றி, அதிகாரபூர்வமாக ஒரு ஐஏஎஸ் அதிகாரியே நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது மிகவும் வெட்கக்கேடானது.
அரசுப் பணி என்பது அமைச்சர், எம்எல்ஏ-க்களின் வீட்டு வேலைகளில் ஒன்றா என்பது தெரியவில்லை. ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி உயர் நீதிமன்றத்திலேயே பட்டவர்த்தனமாக சிபாரிசு மூலம் அரசுப் பணி பெறுவது வழக்கமான ஒன்றுதான் என ஒப்புதல் வாக்குமூலம் அளித்தால், தகுதி என்பதும் தேர்வு என்பதும் ஏன் என்று தெரியவில்லை. எல்லா அரசுப் பணிகளையும் அமைச்சர்களுக்கும், எம்எல்ஏ-க்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்துவிட்டு, தமிழ்நாடு தேர்வாணையத்தை மூடிவிட்டுச் செல்ல வேண்டியதுதானே?
- ஜீவன்பி.கே.,கும்பகோணம்.