தமிழகத்தில் அன்றாடம் நாம் காணும் அவலக் காட்சிகளை உலகுக்குத் தெரியப்படுத்துகிறார் செல்வேந்திரன் (தமிழகத்தின் மண்ணியல் நிபுணர்கள்). உண்மையைச் சொல்லப்போனால், நாட்டில் குடிமகன்கள் பல்கிப் பெருகிப்போனதற்குக் காரணம், அரசின் இலவசங்கள்தான். அரசு கொடுக்கும் இலவச அரிசி போன்றவற்றைப் பயன்படுத்திக்கொண்டு, சரியாக வேலைக்குச் செல்லாமல், கிடைக்கும் சொற்ப வருவாயில் குடித்துத் தன் ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கொண்டதோடு, தன் குடும்பத்தைச் சரிவர கவனிக்காமல் புறக்கணிக்கும் வாலிபர்கள்தான் தமிழகத்தில் அதிகம். குடிகாரர்களின் தலைநகரான ரியோ டி ஜெனிரோவை தமிழகம் முந்திவிட்டது என்ற பெருமை நமக்கு வேண்டாம்.
- கே.பி.எச். முகம்மது முஸ்தபா,திருநெல்வேலி.