‘மெல்லத் தமிழன் இனி…’ கட்டுரைத் தொடர், குடிப்பவர்கள் மட்டுமல்ல, அவரைச் சார்ந்த சமூகம் படும் அல்லல்களையும் கூறுபோடுகிறது. இதற்கிடையே இழப்பைச் சரிகட்ட புதியவகை மதுவை அறிமுகப்படுத்த முனையும் அரசு பற்றிய செய்தி. இன்னொரு பக்கம் கையில் மதுவுடன் திரியும் சிறார்கள் பற்றிய செய்தி. இப்படியிருக்கும்போது மது மறுவாழ்வு மையத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை ஏன் அதிகரிக்காது. இது போன்ற கட்டுரைகளைத் தொகுத்து பள்ளியில் பாடமாக வைத்தால்தான், இனி வரும் சமூகம் தெளிய வாய்ப்பு உருவாகும்.
- கி. ரெங்கராஜன்,திருநெல்வேலி.