இப்படிக்கு இவர்கள்

பெரியாரின் அசல் வடிவம்

செய்திப்பிரிவு

‘பெரியாரின் வாரிசுதான் ஜெயலலிதா’ என்கிற க. திருநாவுக்கரசின் கட்டுரைக்குத் தெளிவான விளக்கத்தை மறுப்பாக, விடுதலை ராஜேந்திரன் ‘ஜெயலலிதா பெரியாரின் வாரிசா?’ என்கிற தலைப்பில் பதிவு செய்துள்ளார் (25-10-2014).

க. திருநாவுக்கரசு கட்டுரையில் பெரியார் சொன்னதாக எழுதியிருந்ததைப் படித்ததும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. கட்டுரையைப் படிக்கப் படிக்க, ‘இப்படிப்பட்ட உன்னதமான தலைமைப் பண்புகளைக் கொண்ட பெரியாரையா தவறாகப் புரிந்துகொண்டேன்!’ எனப் பெருந்துயருற்றேன். பெரியாரின் அசல்வடிவத்தை விடுதலை ராஜேந்திரன் கட்டுரையால் அறிந்தேன். ஏதோ அரசல்புரசலாகப் பெரியாரைப் பற்றி அறிந்திருந்த எனக்கு, மேலும் மேலும் பெரியாரைப் பற்றி அறிய ஓர் ஏக்கத்தை ஏற்படுத்திய கட்டுரையாளருக்கு நன்றி.

- பேராசிரியர் எஸ். கே. ஹயாத் பாஷா,சென்னை.

SCROLL FOR NEXT