‘அமெரிக்கா ஏன் தோற்கிறது?’ என்கிற கட்டுரையைப் படித்தேன். கற்பிப்பதில் ஆசிரியரின் முக்கியத்துவத்தை ஒருபோதும் புறக்கணித்துவிட முடியாது என்பதைத் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார் கட்டுரையாளர்.
கற்பித்தலில் மாணவர்களை மீத்திறன் மிக்கவர்கள், இயல்பானவர்கள், மெல்லக் கற்பவர்கள் என்று பிரித்தறிதல் முக்கிய இடம்பெறுகிறது. இது இணையவழிக் கற்பித்தலில் கருத்தில் கொள்ளப்படுவதில்லை. அத்தோடு நம் நாட்டுப் பெற்றோர்கள், தன் குழந்தைகளின் கற்றலில் மிகவும் ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள். தன் பிள்ளைக்கு எது வரும்? எதில் ஆர்வம் உள்ளது? அவர்களின் கற்றல் திறனின் நிலை என்ன? என்பதையெல்லாம் சற்றும் கருத்தில்கொள்ளாமல் பாடத்திணிப்புக் கல்வி நிறுவனங்களில் சேர்த்துவிடுகிறார்கள். கடைசியில், அது ஒத்துப்போகாமல் மனநலமும் உடல்நலமும் பாதிக்கப்பட்ட பல மாணவர்களை எனக்குத் தெரியும்.
- ஒரு வாசகர்,தி இந்து இணையதளம் வழியாக…