‘பெண் இன்று’ பகுதியில் (ஆகஸ்ட் 31) ‘தொடரும் வன்முறை, தாமதமாகும் இழப்பீடு’ பல புதிய செய்திகளைப் புரியவைத்தது. படித்த பெண்கள் பலருக்குக்குக்கூட இந்த இழப்பீட்டுத் தொகை பற்றிய செய்தி தெரியுமா என்பதே சந்தேகம். பாலியல் பலாத்காரம் பற்றி வெளியில் சொல்லவே பயப்படும் மக்கள், இந்த இழப்பீட்டுக்காக நீதிமன்றத்தின் படி ஏறப் பயந்துவிடுவதாலேயே இதுபற்றி அறியும் ஆர்வம் இல்லாமல் இருக்கின்றனர். அந்தச் செய்தியைத் தெளிவாக விளக்கிய ‘பெண் இன்று’ பகுதியில் இதுபோன்ற சேவைகள் அனைத்துப் பெண்களுக்கும் என்றும் தேவை.
- உஷாமுத்துராமன், திருநகர்.