டாக்டர் ஆர். கார்த்திகேயன் எழுதியுள்ள ‘இந்தியர்கள் இயல்பாகவே பன்முக மேனேஜர்கள்தான்’ கட்டுரையின் ஒவ்வொரு கருத்தும் இன்றைய இளைய தலைமுறை, மனதில் பதித்துச் செயலாற்ற வேண்டியவை.
நாம் நமது வேர்களாகிய தாய்மொழியையும் சொந்த ஊரைப் பற்றியும் அவசியம் அறிந்திருக்க வேண்டும். என் இந்திய நண்பர் ஒருவரிடம் அமெரிக்காவில் கேட்கப்பட்ட கேள்வி, ‘உனக்கு மதுரை தெரியுமா?’ என்பது. தெரியும் என்ற பதிலுக்கு, என்ன தெரியும் என்றதும் மீனாட்சி அம்மன் கோயில் மட்டுந்தான் அவரால் சொல்ல முடிந்திருக்கிறது.
மதுரையின் பிரசித்திபெற்ற ஜிகர்தண்டா, திருமலை நாயக்கர் மகால், காந்தி மியூசியம், மதுரை மல்லி, கிரானைட் தெரியாதா, அந்த ஊருக்குப் பக்கத்திலுள்ள ஊரிலிருந்து வந்திருக்கிறாய். உனக்குத் தெரியாதது, மத்தியப் பிரதேசத்திலிருந்து மூன்று நாள் சுற்றுலா வந்த எனக்குத் தெரிந்திருக்கிறது என்று கூறினாராம்.
நாம் நமது சாளரங்களைச் சாத்திவிட்டோமோ என்ற ஐயம் ஏற்படுகிறது.
- மெய்யப்பன் சாந்தா,மதுரை.