பணம் சம்பாதிக்க, எதிலெல்லாம் ஊழல் செய்கிறார்கள் என நினைத்தாலே நெஞ்சம் குமுறுகிறது.
நோயாளிகள் உட்பட, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினசரி உபயோகப்படுத்தப்படும் ஆவின் பாலின் கலப்படம் என்பது கொஞ்சங்கூட மனசாட்சி இல்லாது.
இந்தக் காலத்தில் எதை நம்புவது, யாரை நம்புவது என்பதே சாமான்ய மக்களுக்கு ஒரு பெரிய கேள்விக்குறி. அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு, மேற்கொண்டு இந்த மாதிரி பாலில் கலப்படம் செய்ய முடியாத அளவுக்கு, புதிதாக விதிமுறைகளை வகுத்து, அவை முறையாகக் கண்காணிக்கப்பட வழி செய்ய வேண்டும்.
- பி. நடராஜன்,மேட்டூர்அணை.