எந்த நல்ல விஷயங்களையும் குழந்தைகளிடம் விதைப்பதுதான் சரியான அணுகுமுறை என்ற நோக்கில், தங்க.சண்முகசுந்தரம் பிஞ்சு மனதில் ‘நோ-ஆயில்... நோ பாயில்’ என்ற எளிய ஆனால், உயரிய தாரக மந்திரத்தை விதைத்துள்ளார்.
அவர்கள் மூலம் பெற்றோர்களுக்கும் கொண்டுசெல்லும் புனிதப் பணியில் ஈடுபட்டுள்ளது, வலிமையான வருங்காலச் சந்ததியை உருவாக்கும். குறிப்பாக, குழந்தைகளுக்கான சிறுஉணவுப் பெட்டியில் பழங்கள், காய்கறிகள் கொண்ட கலவையைக் கொடுத்துச் சாப்பிட செய்வது, கீரைகளின் பயன்பாடு, மூலிகை வகைகளை அறியச் செய்வது போன்ற நல்ல விஷயங்கள் அவர்கள் மனதில் பதிந்தாலே பீட்சா, பர்கர் போன்ற துரித உணவுகளைத் தவிர்ப்பார்கள்.
- அ.பட்டவராயன்,திருச்செந்தூர்.