இப்படிக்கு இவர்கள்

நல்ல பாடம்

செய்திப்பிரிவு

மேற்கு வங்கத்தில் செயல்பட்டுவந்த சாரதா நிறுவனம், மக்களின் பணத்தில் நிகழ்த்திய ஊழலை ஊடகம் கையில் எடுத்துள்ளது அற்புதம்.

இது போன்ற ஊழல்கள் இனி நடைபெறாதபடி பிரபலங்களின் பின்புலத்தை ஒடுக்கவும் நீதித் துறைக்குப் பக்கபலமாய் ஊடகத் துறை இருக்க வேண்டியதும் அவசியம்.

சட்டத் துறையால் அதிகாரி சகாயத்தின் நியமனத்தை எதிர்த்த தமிழக அரசின் முறையீட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்து, சம்பந்தப்பட்ட ஊழலை வெளிக்கொணர சகாயத்தை நியமித்து, அவருக்கு சகல அதிகாரங்களையும் தந்திருப்பது சாதனை. சட்டம், ஊடகம், சமூகம் ஆகிய சக்திகளின் துணையுடன், ஊழல் சக்திகளை நீர்த்துப்போகச் செய்வது, வருங்கால ஊழல்வாதிகளுக்கு ஒரு நல்ல பாடம்.

- கி. ரெங்கராஜன்,திருவல்லிக்கேணி.

SCROLL FOR NEXT