பாலியல் தொழில் என்பது ஏதோ பெண்களால் தொடங்கப்பட்டது என்பது போன்ற மாயத்தோற்றம் இன்றளவும் நம்மிடையே இருந்துவருகிறது. ஆண்கள் அதை ஊக்குவிப்பதே இல்லை என்பது போன்ற மறை பொருளும் அத்தோற்றத்தில் ஒளிந்துகொண்டுள்ளது. செய்தி ஊடகங்களும் ‘அழகிகள் கைது’ எனச் செய்தி வெளியிட்டு தங்களைப் பண்பாட்டுக் காவலர்களாகக் காட்டிக்கொள்வதோடு தங்கள் பணி முடிந்ததாகக் கருதிக்கொள்கின்றன. இப்படியான சூழலில் குஷ்புவை நாம் ‘பண்பாட்டுத் துரோகி’ எனப் பட்டம் தந்து வசைபாடிவிடக்கூடாது. அவரது நியாயங்களை ஓரளவேனும் உள்வாங்கிக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.
- முருகவேலன், படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை.