இப்படிக்கு இவர்கள்

ஒவ்வொரு வாரமும் காத்திருப்பு

செய்திப்பிரிவு

முதலாண்டு முடிவடையும் தருணத்தில் அறிவித்திருந்த தொடர்களில் என்னை மிகவும் ஈர்த்த தலைப்பு, ‘வீடில்லா புத்தகங்கள்’. அதுபற்றியே கடந்த ஒரு வாரமாக யோசித்துக்கொண்டிருந்தேன்.

அந்த அளவுக்கு நுட்பமும் எளிமையும் கொண்டதாக இருந்தது அந்தத் தலைப்பு. தொடரின் ஆரம்பத்தில் அதன் பொருள் புரிந்து இன்னும் வியந்தேன்.

விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வை துணையெழுத்து, தேசாந்திரி போன்ற தொடர்கள் வழியே பொதுச் சமூகத்துக்கு அறிமுகப்படுத்திய எஸ்.ராமகிருஷ்ணனின் ‘வீடில்லா புத்தகங்க’ளின் வழியே அறிமுகப் படுத்தப்போகும் நூல்களை எதிர்நோக்கி ஒவ்வொரு வாரமும் காத்திருக்கப்போகிறோம்.

- முருகவேலன்,கோபிசெட்டிபாளையம்.

SCROLL FOR NEXT