அதிகாரத்தைச் சரியான முறையில் பயன்படுத்தி, மக்களுக்காகப் பணியாற்ற நினைக்கும் அதிகாரிகள், சில அரசியல்வாதிகளால் இடமாற்றம் செய்யப்படுகிறார்கள். ‘நேர்மை’ என்ற ஒற்றைக் குறிக்கோளால் அவர்கள் அடையும் இன்னல்கள் சொல்லி மாளாது, குடும்பத்தோடு வருடம்தோறும் இடம் மாறுதல், குழந்தைகளுக்கான பள்ளியை மாற்றுதல், மன உளைச்சலுக்கு ஆளாகுதல், சக ஊழியர்களின் வெறுப்புணர்வுக்கு ஆளாகுதல் போன்ற சங்கடங்களை எதிர்கொள்கிறார்கள். சகாயம் போன்ற அதிகாரிகள் இடையூறுகள் ஏதுமின்றி மக்கள் பணி செய்ய அனுமதிக்கப்படவேண்டும்.
- தமிழ். பிரபாகரன், நாமக்கல்.