இப்படிக்கு இவர்கள்

இன்றைய ஆட்சியாளர்கள்

செய்திப்பிரிவு

ஒரு காலத்தில் நம் நாட்டில் கர்ம வீரர் காமராஜர், தியாக சீலர் கக்கன் போன்றோர் எளிமையும், இனிமையும் கொண்டு தன்னலம் கருதாது பொதுநலம் கருதி ஆட்சி செய்தனர் என்று இன்றைய தலைமுறையினரிடம் கூறுகிறோம்.

ஆனாலும், அதை அவர்கள் நம்ப மறுக்கிறார்கள். கற்பனைகள் நிறைந்த கட்டுக் கதை என நினைக்கிறார்கள் என்பதை கட்டுரையாளர் அ.கா.பெருமாள் எழுதிய ‘ஆட்சியாளர்கள் எப்போதும் அப்படித்தான்’ என்ற கட்டுரை அற்புதமாக விளக்கியது. இந்த நிலையில்தான் நாம் காமராஜரையும் கக்கனையும் வைத்திருக்கிறோம் என்பதை நினைக்கும்போது நெஞ்சம் கனப்பதைத் தவிர்க்க இயலவில்லை.

- மு. மகேந்திர பாபு,கருப்பாயூரணி.

SCROLL FOR NEXT