‘கருத்துப் பேழை’ பகுதியை சனிக்கிழமைகளிலும் வெளியிடுவது என்ற ‘தி இந்து'வின் முடிவை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.
சில நாட்களுக்கு முன் நான் எழுதிய கடிதத்தில் இந்த கோரிக்கையை வைத்திருந்தேன். எனது ஆசை இவ்வளவு விரைவில் நிறைவேறும் என நினைக்கவில்லை.
என்னைப் போன்ற பல வாசகர்களின் விருப்பமும் நிறைவேறியதில் சந்தோஷம். `தி இந்து’வின் பாரம்பரியம், வாசகர்களை எப்போதும் உயரிய ஸ்தானத்தில் வைத்துள்ள ஒன்றாகும்!
- ஜா. அனந்த பத்மநாபன்,திருச்சி.