தந்தை பெரியாரின் பிறந்தநாள் கட்டுரையான ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதிய ‘தமிழர் தலைவர் பெரியார்!' கட்டுரை படித்தேன்.
பெரியாரைப் பற்றி எத்தனையோ நூல்கள் வந்தாலும் முதன்மையான, சரியான வரலாற்றைத் தாங்கி வந்த நூல் சாமி சிதம்பரனார் எழுதிய ‘தமிழர் தலைவர்' என்ற செய்தி அறிந்து வியந்தேன். ஒரு வரலாற்று நூலைப் பிழையின்றி எழுத வேண்டுமென்றால், எப்படிப்பட்ட முயற்சிகளை எடுக்க வேண்டும் என்பதைக் கட்டுரை வெளிப்படுத்திய விதம் அருமை.
வரலாறு பற்றிய பதிவுகளைச் சரியான நேரத்தில் பதிவுசெய்யாவிட்டால் பயனில்லை என்பதை ‘ஆறின கஞ்சி பழங்கஞ்சி' என்ற கட்டுரை வாசகம் வலுவாய்ச் சொன்னது. பெரியாரின் சரியான வரலாற்றைக் கூறும் ‘தமிழர் தலைவர்' நூலைத் தமிழர்கள் அனைவரிடமும் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டிய கடமை தமிழக திராவிடக் கட்சிகளுக்கு மட்டுமல்ல, நம் எல்லோருக்குமே உண்டு.
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்,வேம்பார்.