குற்றப் பின்னணி உள்ளவர்களை அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ளக் கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் அறிவுரை காலம் கடந்த ஞானோதயம். பண பலம், அரசியல் செல்வாக்கு மட்டுமே வேட்பாளருக்கான தகுதியாகக் கருதப்படுகிறது.
கடுமையான குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, வழக்கு விசாரணையில் சிக்கியவர்களை அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ளாதீர்கள் என்று கேட்டுக்கொள்வதற்குப் பதிலாக, வேட்பாளராகவே நிறுத்தாதீர்கள் என்று பரிந்துரைப்பதுதானே சரியாக இருக்கும்?
- சாரதா இராமச்சந்திரன், தஞ்சாவூர்.