உலகளாவிய ஆலோசனை நிறுவனமான ‘பாஸ்டன் கன்சல்டிங் க்ரூப்’ என்ற அமைப்பில் பணியாற்றிய அருண் மொய்ரா என்ற பொருளாதார நிபுணர் பின்னர் திட்டக் குழு உறுப்பினராக இருந்தவர். கால வேகத்தின் போக்குக்கேற்பத் திட்டக் குழு மாற்றப்பட வேண்டும் என்று அவர் தான் பணிபுரிந்த காலத்திலேயே சொன்னார். அதைச் செய்யத்தான் திட்டமிட்டிருக்கிறார் பிரதமர் மோடி.
‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே’ என்ற பவணந்தி முனிவரின் நன்னூல் சூத்திரம் நரேந்திர மோடிக்குப் புரிகிறது. மற்றவர்களுக்கு ஏன் புரியவில்லை? இன்னமும் பாரபட்சமும் சுயநலமும் அவர்கள் கண்களை மறைக்கின்றன.
- ஆர். நடராஜன், சென்னை.