திருவண்ணாமலை செஞ்சி சாலையில் குரங்குக் கூட்டத்தைக் கண்டதும் காரையோ பேருந்தையோ நிறுத்தி, உணவுப் பண்டங்களை வீசியெறிந்து ஒரு ஒற்றுமைக் கூட்டத்தினிடையே வேற்றுமை பனிப் போரை உருவாக்குவது நித்திய வாடிக்கையாகிவிட்டது.
காட்டுயிர் ஆர்வலர்கள் சொல்வதுபோல் விலங்குகளின் உணவுப் பழக்கத்தை நாம் மாற்றுவதால் அதன் வாழ்க்கைப் பழக்கமும் குணமும் மாறிவிடும் பேராபத்துக்கு வழி உண்டு.
ஆம், ரமணாசிரமத்துக்குச் செல்லும்போது சிலர் (நானும் உள்ளடக்கம்) குரங்குகளுக்கு பிஸ்கட், சப்பாத்தி, எண்ணெய்ப் பண்டங்களை வழங்குவார்கள். அவற்றின் வாழ்க்கை முறையைத் தெரிந்துகொள்பவர்களால் மட்டுமே இதுபோன்ற உணவுப் பழக்கத்தைத் தடைசெய்ய முடியும்.
- கி. ரெங்கராஜன்,சென்னை.