‘பயங்கரவாதத்தை எதிர்கொள்வது எப்படி?’ என்ற தலையங்கம் இந்தியாவில் இஸ்லாமியர்களின் நிலையை அருமையாக படம்பிடித்துக் காட்டியது. இந்த தேசத்தின் தேசியக் கொடியில் அவர்கள் சிந்திய ரத்தத்துக்கும் இடமுண்டு. ஆனால், இன்று அவர்களின் நிலைமை தலைகீழாக மாறிப்போய் இருக்கிறது. கல்வி, வேலைவாய்ப்பு, சுயதொழில் போன்ற அனைத்துத் துறைகளிலும் அவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். அதைத்தான் அல்-காய்தா போன்ற இயக்கங்கள் நிரப்பிக்கொள்ள முயல்கின்றன. நாட்டுப்பற்றுள்ள எந்த இஸ்லாமியரும் அல்-காய்தா போன்ற இயக்கங்களுக்கு உடன்பட மாட்டார்.
- அத்தாவுல்லா, நாகர்கோவில்.