இப்படிக்கு இவர்கள்

நாட்டின் நிஜ முகம்

செய்திப்பிரிவு

கிருஷ்ணா ஆற்றை 120 நிமிட நேரம் நீந்திக் கடந்து குழந்தையைப் பெற்றெடுத்த அந்த எல்லவ்வா என்ற அதிசயப் பெண்ணின் செய்தியைப் படித்து வாயடைத்துப்போனேன். துணிச்சலுக்கும் தன்னம்பிக்கைக்கும் ஓர் அடையாளமாகத் திகழும் அந்தப் பெண்ணின் வீரதீர செயலைப் பாராட்டவா அல்லது இன்னும் நமது நாட்டின் கிராமப்புறங்கள் இருக்கும் அவல நிலை கண்டு மனம் நோகவா என்று தெரியாமல் திகைத்து நிற்கிறேன்.

பளபளக்கும் நகர்ப்புறங்களின் நட்சத்திர அடையாளமாக மினுங்கும் பிரம்மாண்ட மருத்துவமனைகளையும் தாண்டி இன்னும் உயிர்வாழும் லட்சக் கணக்கான கிராமப்புற எல்லல்வாக்களே இந்நாட்டின் உண்மையான நிஜ முகங்கள்.

இந்தியா வல்லரசாக வேண்டும் என்று மேடைக்கு மேடை முழங்கும் அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் இந்த அவல நிலைக்கு என்ன சமாதானம் சொல்லப்போகிறார்கள்?

- கே. எஸ். முகமத் ஷூஐப். காயல்பட்டினம்.

SCROLL FOR NEXT