இப்படிக்கு இவர்கள்

ஆழ்துளைக் கிணறு சட்டம்

செய்திப்பிரிவு

அருகிவரும் நிலத்தடி நீரைப் பாதுகாக்க, மனிதாபிமானமற்ற முறையில் உறிஞ்சிக் கொள்ளை லாபம் அடைந்து வரும் தனியார் நிறுவனங்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காமல், நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயிகளை, இதுபோன்ற பொதுவான சட்டங்களை இயற்றி மேலும் துன்பத்துக்கு ஆளாக்குவது எந்த வகையிலும் நியாயமல்ல. புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைக்க அனுமதி பெறுவதென்பது விவசாயிகளை மேலும் அலைக்கழிக்கச் செய்வதோடு, பெரும் பொருட்செலவையும் ஏற்படுத்தும்.

விவசாயத்தில் கிடைக்கும் குறைந்த வருமானம் காரணமாகப் பொருளாதார நெருக்கடியால் அவதிப்பட்டுவரும் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளைக் கருத்தில்கொண்டு, விவசாயிகளுக்கு இந்தச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டியது மிகவும் அவசரமானதும் அவசியமானதுமாகும். இல்லையெனில், நலிந்துவரும் விவசாயம் தமிழ்நாட்டில் விரைவிலேயே நசிந்து அழிந்துவிடும்.

- வ.சுந்தரராஜு, திருச்சி.

SCROLL FOR NEXT