பாரத ரத்னா போன்ற பட்டங்கள் அந்தப் பெயருடனே ஆரம்பிக்கப்பட்டன. கருணாநிதி ஏற்கெனவே நடைமுறையிலுள்ள எல்லா சமஸ்கிருதப் பெயர்களையும் தமிழாக்கச் சொல்லவில்லை. ஆனால், பல ஆண்டுகளாக நடைமுறையிலுள்ள ‘ஆசிரியர் தினம், டீச்சர்ஸ் டே’ போன்றவற்றை சமஸ்கிருதமாக்க வேண்டாம் என்றுதான் கூறுகின்றார்.
முதலில் பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட வேண்டும் என்றார்கள். இப்போது ஆசிரியர் தினத்தை ‘குரு உத்சவ்’ எனப் பெயர் மாற்றுகிறார்கள். இது பாஜகவின் தாய்க் கழகமான ஆர்.எஸ்.எஸ்ஸின் முக்கியக் குறிக்கோளான, இந்தியாவை வேதகாலத்துக் கலாச்சாரத்துக்கு மாற்ற வேண்டும் என்ற முயற்சியின் ஆரம்ப கட்டமாக இருக்கிறது என்றுதான் அச்சப்பட வைக்கிறது.
- ந. சாம்பசிவம், சென்னை.