இப்படிக்கு இவர்கள்

பணமே வெற்றியல்ல

செய்திப்பிரிவு

‘வெற்றிக் கொடி’ இணைப்பிதழில் ‘வாழ்வைப் பேசுங்கள்… மரணத்தை அல்ல!’ என்ற கட்டுரையைப் படித்தேன்.

நீங்கள் எத்தகைய மனிதராக இருக்க விரும்புகிறீர்களோ அத்தகைய மனிதராக மாற உங்கள் வார்த்தைகளில்தான் வழி உள்ளது என்று கட்டுரையாசிரியர் தெரிவித்துள்ளார்.

நமது மதமும், ‘நாம் எதுவாக விரும்புகின்றோமோ அதுவாகவே நம் வாழ்க்கை அமைகிறது. நம்முடைய எண்ணங்கள்தான் நம்மை உருவாக்குகின்றன’ என்று சொல்கிறது.

வாழ்க்கையில் வெற்றி அடைய பணம் ஒரு கருவிதானே தவிர, அதுவே வாழ்க்கையின் வெற்றி அல்ல என்றும், பணம் உள்ளவர்கள் எல்லோரும் வாழ்க்கையில் வெற்றிபெற்றவர்களும் இல்லை என்பதையும் விளக்கியுள்ளார்.

நேர்மறை எண்ணங்கள், நேர்மறை வார்த்தைகள்தான் ஒரு மனிதரை நல்லவராகச் செதுக்குகின்றன. ஒரு நல்ல கட்டுரையைப் படித்த நிறைவு ஏற்பட்டது.

- ஜீவன்.பி.கே,கும்பகோணம்.

SCROLL FOR NEXT