இப்படிக்கு இவர்கள்

பலப்பிரயோகம் சட்டப்படியானதே

செய்திப்பிரிவு

‘நித்தியானந்தாவுக்கு ஆண்மைப் பரிசோதனை நடக்கவில்லை, மருத்துவர்களை ஏமாற்றித் தப்பினார் என்றும் போலீஸார் மீண்டும் நீதிமன்றத்தை நாட இருக்கின்றனர் என்றும் வெளியான செய்தியைப் படித்தேன்.

மேலும், மருத்துவப் பரிசோதனையின்போது அவர் மருத்துவப் பரிசோதனைக்கு முடியாது எனத் தெரிவித்ததால், மருத்துவர்கள் அவருக்கு ஆண்மைப் பரிசோதனை நடத்தவில்லை என்றும் செய்தியில் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த விஷயத்தைப் பொறுத்தமட்டில், மருத்துவர்களும் போலீஸாரும் சட்டப்படியான தங்கள் கடமையிலிருந்து விலகிவிட்டனர் என்றே தெரிகிறது. மருத்துவப் பரிசோதனை, ஒரு வழக்குக்கு முக்கியமான சாட்சியமாகக் கருதப்படும் நிலையில், பரிசோதனைக்கு உரியவர் மறுப்புத் தெரிவித்தாலும் ஒத்துழைக்க மறுத்தாலும் மருத்துவர்கள் தேவையான பலத்தைப் பிரயோகப் படுத்தி மருத்துவப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று குற்றவியல் விசாரணை முறைச் சட்டம் பிரிவு 53 தெளிவாகக் கூறுகிறது.

மேலும், அத்தகைய பலப்பிரயோகம் சட்டப்படியானதே என்றும் அந்தப் பிரிவு சுட்டிக்காட்டுகிறது. எனவே, போலீஸார் திரும்பவும் நீதிமன்றத்தை அணுகுவது தேவையற்றது என்றே கருதுகிறேன்.

- பொ. நடராசன், நீதிபதி (பணி நிறைவு) உலகனேரி.

SCROLL FOR NEXT