இப்படிக்கு இவர்கள்

குறைபாடுகளே காரணம்?

செய்திப்பிரிவு

வறுமையின் காரணமாக கார் ஓட்டுநர் குடும்பம் தீக்குளித்து உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையைத் தருகிறது.

வெங்கடேசன் பணியாற்றிவந்த நிறுவனம், அவர் குடும்பத்தின் சூழ்நிலையைக் கருத்தில் கொள்ளாமல் பணியிலிருந்து நீக்கியது, அவர் காதல் திருமணம் செய்துகொண்டதால் உறவினர்களால் கைவிடப்பட்ட நிலையில் வாழ்ந்தது, தன் வருவாயைக் கருத்தில் கொள்ளாமல் குழந்தைகளைத் தனியார் பள்ளியில் படிக்கவைத்தது என அடுக்கடுக்காகக் காரணங்களை எண்ணிப்பார்க்கிற அதே நேரத்தில், ‘இன்னும்கூட வாழ வழி இருக்கிறது’ என்ற எண்ணம் அவருக்குத் தோன்றாமல் போய்விட்டதற்கு, ‘கல்வியில், எண்ண ஓட்டங்களில், சமூக அமைப்பில்’ உள்ள குறைபாடுகள்தான் முக்கியக் காரணம்!

- கி. நாவுக்கரசன்,ராணிப்பேட்டை.

SCROLL FOR NEXT