திட்டக் குழு என்பது இந்த தேசத்தின் வளர்ச்சிக்குப் பெரும்பங்கு வகித்த ஓர் அமைப்பு. அதைக் கலைத்துவிடுவது என்ற பிரதமரின் அறிவிப்பு அதிர்ச்சிகரமானது. பீட்டர் அல்போன்ஸ் தன்னுடைய கட்டுரையில் மிக விரிவாகத் திட்டக் குழுவின் ஆரம்பம் முதல் அதன் பலனையும் செயல்பாட்டினையும் எடுத்துரைத்துள்ளார்.
சென்னைக்குக் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி நீர்த் தேக்கம், திட்டக் குழுவின் திட்டத்தால் வந்ததுதான். சத்தியமூர்த்தி அமைச்சராக இருந்த காலத்தில் அவரின் பெருமுயற்சியால் கிடைத்த அற்புதத் திட்டம். தமிழ்நாட்டிலும் சரி, இந்தியாவிலும் சரி, அப்போது இருந்த அரசியல்வாதிகள் சுயநலம் இல்லாது, நாட்டு நலனிலும் மக்கள் நலனிலும் அக்கறை கொண்டவர்களாய் இருந்ததால் மக்களுக்கு நல்ல பல திட்டங்கள் கிடைத்தன.
ஆனால், இன்றைய அரசியல்வாதிகள் பலர் சுயநலச் சக்கரவர்த்திகளாக இருப்பதால், மக்களுக்கு எந்தத் திட்டமும் போய்ச்சேர்வதில்லை. திட்டக் குழுவைக் கலைக்காமல், தன்னலமில்லா உறுப்பினர்கள் அதில் இடம்பெறச் செய்ய வேண்டும். 60 ஆண்டுகளுக்கும் மேலாக தேசத்தின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றிய ஓர் அமைப்பைக் கலைப்பது சரியாகாது.
- கேசவ்பல்ராம், திருவள்ளூர்.