‘இந்தத் தீர்ப்பு ஒருதலைபட்சமானது’ என்று ராம்ஜெத்மலானி சரியாகச் சொல்லியிருக்கிறார். காவிரிப் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை வென்ற காரணத்துக்காக கர்நாடக அரசைத் திருப்திப்படுத்தும் விதமாகவும் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் தேர்தலின்போது ஆதரவு கொடுக்காததற்காகப் பழிவாங்கும் தொனியிலும் இந்தத் தீர்ப்பு அமைந்துவிட்டது.
தமிழ்நாட்டில் காங்கிரஸோ பாஜகவோ ஒரு இடத்தைக் கூட இனிமேல் வெல்ல முடியாது. ஏனெனில், அம்மா உணவகம், அம்மா குடிநீர் போன்ற திட்டங்களெல்லாம் அடித்தட்டு மக்களிடம் அவ்வளவு செல்வாக்கைச் செலுத்துவதால் இந்தத் தீர்ப்பின் காரணமாக ஜெயலலிதா மீது மக்களின் அனுதாபம்தான் அதிகரித்திருக்கிறது.
- சந்துரு,இணையதளம் வழியாக...