‘இப்படிக்கு இவர்கள்’ பகுதியில் அடுத்த தலைமுறை அக்கறை என்ற தலைப்பில் டாக்டர் கார்த்திகேயன் எழுதியதைப் படித்தேன். ஒருகருத்தில் மட்டும் எனக்கு நூறு சதம் உடன்பாடில்லை. அஞ்சல் வழியில் படித்தவர்களைத் தரம் குறைந்தவர்களாக மதிப்பிடுவதை ஏற்க முடியாது.
30 ஆண்டுகளுக்கு மேலாக கல்விக் கல்வியில் பணியாற்றிய அனுபவம், கடந்த 10 ஆண்டுகளாகத் தொலைநிலைக் கல்விவழியாக உளவியல் ஆலோசனை மற்றும் உளநல சிகிச்சை முறைகளைக் கற்பித்துவருகிறேன். நேர்வழிக்கு நிகரான கல்வியையும் பயிற்சியையும் அளித்துவருகிறோம். அஞ்சல்வழியில் கல்வி பயில்பவர்கள் எவருக்கும் எந்த விதத்திலும் தரம் குறைந்தவர்கள் இல்லை என்பதை அறுதியிட்டுச் சொல்வேன்.
- டாக்டர் ஜி. ராஜமோகன், தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகம், சென்னை-15.