மத நல்லிணக்கத்துக்கு நாகப்பட்டினமும் சிறந்த உதாரணம்தான். நாகப்பட்டினத்துக்குத் தெற்கே உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி மாதா கோயில்.
மேற்கே சிக்கலில் சிங்காரவேலர் கோயில். வடக்கே நாகூர் ஆண்டவர் தர்காவும் திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலும் உள்ளது. மூன்று மதங்களும் சங்கமிக்கும் இடமாக நாகப்பட்டினம் விளங்குகிறது.
தர்காவின் உள்ளே இருக்கிற பித்தளை கேட் பழனியாண்டிப் பிள்ளை என்பவரால் கொடுக்கப்பட்டது. நாகூர் ஆண்டவர் சமாதியில் பூசும் சந்தனம் சில காலம் முன்பு வரை ஒரு பிராமணக் குடும்பத்தினரால் அரைத்துக் கொடுக்கப்பட்டுவந்தது.
முஸ்லிம் கல்யாணங்களில் நால்வர் உட்கார்ந்து சாப்பிடும் தட்டுக்கு சஹன் என்று சொல்வார்கள். இதில் எவ்வித பேதமும் பாராமல் முஸ்லிம்களும் இந்துக்களும் கலந்து ஒரே சஹனில் சாப்பிடுவதை இன்றும் காணலாம்.
- எஸ்.பஷீர் அஹமத்,நாகப்பட்டினம்.