இப்படிக்கு இவர்கள்

ஒடுக்கப்பட்டோரின் குரல்

செய்திப்பிரிவு

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 18-ல், சென்னையைச் சுற்றி ஒட்டப்பட்டிருக்கும் இரட்டைமலை சீனுவாசனின் சுவரொட்டிகளைப் பார்த்து, ‘யாரிவர்?’ என எழுந்த கேள்விக்கு இன்று விடை கிடைத்தது.

ஒடுக்கப்பட்டோரின் குரலைச் சொந்தப் பத்திரிகை மூலம் வெளியிட்டதோடு நின்றுவிடாமல், அதைக் கோரிக்கையாக அரசுக்கும் அனுப்பியதைப் பார்க்கும்போது, இவரது போராட்ட பாணியே வேறு என்பது புலனாகிறது.

அண்ணல் காந்தியடிகளைப் போல் பல ஆண்டுகள் தென்னாப்பிரிக்காவில் இருந்துள்ளார். பதிவுகள் அதிகமில்லை என்றாலும், இருப்பவற்றைக் கொண்டு இரட்டைமலை சீனிவாசன் குறித்த கட்டுரையைப் பிரசுரித்த ‘தி இந்து’வுக்கு நன்றி.

- ரங்கராஜன். ஜெயா,மின்னஞ்சல் வழியாக…

SCROLL FOR NEXT