முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர் பற்றிய செய்திகளை தகுந்த புகைப்படங்களோடு விளக்கியதைப் படித்தேன். போர் செய்வதற்கான ஏற்பாடு, அதன் அழிவுகள் அனைத்தையும் பார்த்தபோது மனம் துவண்டது. வரும் சந்ததியினர் போர் என்ற வார்த்தையையே அறியாமல் அமைதியாக வாழ வேண்டும் என மனம் பிரார்த்தனை செய்தது. ‘இனியும் போர் வேண்டுமா?’ கட்டுரையும், அரிய தகவல்களுடன் வெளியான புகைப்படங்களும் மிகவும் பயனுள்ளவை.
- பானு பெரியதம்பி, சேலம்.