திட்டக் குழு முடக்கப்படுவதற்கு மோடிதான் காரணம் என்பதுபோல எழுதப்பட்டுள்ளது கட்டுரை. கடந்த 30 ஆண்டுகளில் திட்டக் குழு மூலம் என்ன சாதனை செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெளிவாக்கவில்லை. அறிஞர்கள் இந்தக் குழுவில் இருந்து பல நல்ல கருத்துக்களை அளித்தார்கள் என்பதெல்லாம் சரிதான்.
20 ஆண்டு கால காங்கிரஸ் அரசு இந்தத் திட்டக் குழு மூலம் என்ன சாதனை செய்ததது? ஒரு காலத்தில் தட்டச்சு இயந்திரம் என்பது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தற்போது கணிணி யுகத்தில் அதன் தேவை குறைந்துவிடவில்லையா? அதுபோல்தான் இதுவும்.
- ஜீவன்.பி.கே., கும்பகோணம்-1.