இப்படிக்கு இவர்கள்

குணம் மாறவில்லை

செய்திப்பிரிவு

‘சீனாவுடன் நாம் எப்போது எல்லையைப் பற்றிப் பேசப் போகிறோம்?’ என்கிற தலையங்கம் படித்தேன்.

காங்கிரஸ் அரசாக இருக்கட்டும் மோடி அரசாக இருக்கட்டும், வெளிநாட்டுப் பயணம் என்றால் வர்த்தக உறவுதான் வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

தன்னை மிஞ்சி ஆசியப் பிராந்தியத்தில் இந்தியா பெரும் நாடாக வளர்வதை சீனா விரும்பவில்லை. அதனால், அவ்வப்போது தன் வாலாட்டுதலை எல்லை மீறி நடக்கும் செயல்கள் மூலம் தெரிவிக்கிறது. சீனாவில் ஆட்சியாளர்கள் மாறியிருக்கலாம்.

ஆனால், அதன் குணம் மாறவில்லை என்பதைத்தான் சமீபத்திய நடவடிக்கைகள் காட்டுகின்றன. மோடி பாடம் கற்றுக்கொள்ளப்போகிறாரா அல்லது பாடம் கற்பிக்கப்போகிறாரா என்பது போகப் போகத் தெரிந்து விடும்.

- ஜீவன்.பி.கே.கும்பகோணம்.

SCROLL FOR NEXT