மற்றுமோர் ஆசிரியர் தினம் வந்துபோயிற்று. இந்த ஆண்டு ஆசிரியர் தினம் மோடி தினமாக மாற்றப்பட்டது. ஆசிரியரது பரிதாப நிலையை நாட்டுமக்கள் அறிய வேண்டும் என்று, டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், தன் பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாட வேண்டும் என்று கூறி, இன்னல்படும் ஆசிரியர்களுக்கு உதவிட தேசிய ஆசிரியர் நலநிதி ஒன்று நிறுவப்படவும் அரசைக் கேட்டுக்கொண்டார்.
இன்று ஆசிரியர் நிலை சில மாநிலங்களில் ஓரளவு உயர்ந்துள்ளது. இரண்டு மணி நேரம் மாணவரோடு உரையாடிய பிரதமர் மோடி, அவர் பெயரைக்கூடக் குறிப்பிட்டதாகத் தெரியவில்லை. அது வருந்தத் தக்கது. தன்னை முன்னிலைப்படுத்துவதிலேயே குறியாக இருக்கின்ற மோடி, எந்த அரசியல் ஆதாயத்தையும் பெற உதவாத ஒருவரை மறப்பது வியப்பல்ல.
- ச.சீ. இராஜகோபாலன், சென்னை-93