‘நிலமும் வளமும்’ பகுதியில் வெளியான ‘நஞ்சிலிருந்து மீட்கப்படும் அமிர்தம்’ கட்டுரை வாசித்தேன்.
அச்சுறுத்தும் கோழிகள், தேயிலை பற்றி ‘தி இந்து’மூலம் அறிந்திருந்த நிலையில், அமிர்தம் என்ற பெயரில் நஞ்சையே அருந்துகிறோம் என்பதையும், அதனால் ஏற்படக்கூடிய நோய்களைப் பற்றியும் வாசித்தபோது அதிர்ந்துபோனேன்.
உண்ணாமல், பருகாமல் தவிர்க்க வேண்டியவற்றின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போவதால், உண்ணத் தகுதியானவையென ஒன்றிரண்டாவது தேறுமா என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. இயற்கை வேளாண்மை என்பது வணிகத்தையும் தாண்டிய மனிதாபிமானம் மிக்கது என்பதைப் புரிந்துகொண்டு, மற்ற விவசாயிகளுக்கும் வழிகாட்டியாகத் திகழ்ந்துகொண்டிருக்கும் அஹ்மத் பாராட்டுக்குரியவரே.
- ஜத்துஜஸ்ரா,கொடைக்கானல்.