இப்படிக்கு இவர்கள்

தேசிய நாளிதழை மாநில மொழியில் கொண்டு சேர்த்த பெருமை தி இந்து-வுக்கே

செய்திப்பிரிவு

தேசிய நாளிதழ்கள் ஆங்கிலம் தாண்டி மாநில மொழிகளில் வெளியிடப்படுவது தமிழகத்தைப் பொறுத்தவரை தொடக்கம் முதலே நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்தக் குறையைப் போக்கிய பெருமை ‘தி இந்து’வுக்கே.

ஆங்கிலப் பத்திரிகைகளின் செய்தித் தேர்வு, தேசிய அம்சங்கள் சார்ந்த கட்டுரைகள், தீவிரமற்ற-மிதமான ஊடக மொழி, ஆகியவற்றுடன் தமிழ்நாட்டுக்கும் தமிழ் மொழிக்கும் மட்டுமே உரிய இலக்கிய, அரசியல், சினிமா நகைச்சுவை கலந்து தினசரி பரிமாறப்படும் இந்தச் சுவை சற்று வித்தியாசமாகவே இருக்கிறது. ‘தி இந்து’ வாசகர்களின் எல்லா விருப்பங்களையும் நிறைவுசெய்யும் விதமாகத் துறைவாரியாக தினமும் வெளிவரும் இணைப்புப் பகுதி மிகவும் சிறப்பாக உள்ளது.

இந்து டாக்கீஸில் வெளிவரும் சினிமா செய்திகள், நடிகையின் படங்கள் கண்ணுக்கு இதமாக இருப்பினும், கருத்துக்கு உறுத்தலாக இருக்கின்றன. அவை தவிர்க்கப்படலாம் அல்லது குறைக்கப்படலாம்.

தேசியச் செய்திகளுக்கு இன்னும் அதிக இடம் தரலாம்.

- வாசன்,மின்னஞ்சல் வழியாக…

SCROLL FOR NEXT