‘நூல் வெளி'யில் வெளியான ‘திருடன் மணியன் பிள்ளை'யின் பேட்டி ஆத்மார்த்தமாக உள்ளது.
மணியன் பிள்ளையின் வாழ்க்கை ‘திருடராய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது' என்பதையும் ‘ஒருவன் ஒரு முறை திருடன் என்று பெயரெடுத்துவிட்டால், அது ஆயுசுக்கும் அவனை விட்டு நீங்காது' என்பதையும் தெளிவுபடுத்துகிறது.
இத்தகைய நூல்கள், சமுதாய மாற்றத்தைக் கொண்டுவரும் என்பது ஆணித்தரமான உண்மையே.
- ஜே. லூர்து,மதுரை.