’சொந்த வீடு' இணைப்பில் ஜே.கே. எழுதிய ‘இயற்கையின் மடியில்' என்ற படக் கட்டுரை படித்தேன். சுற்றுச் சூழல் சுற்றுலா வெகுவாகப் பிரபலமாகிவரும் வேளையில், உலகில் முதல் ஐந்து இடங்களைப் பிடிக்கும் சுற்றுச் சூழல் தங்கும் விடுதிகளின் படங்கள் விழிகளை வியப்பால் விரியவைத்தது.
மலை, கடல், பாலைவனம் போன்ற இடங்களில் கோடிகளைக் கொட்டி சுற்றுச் சூழல் சுற்றுலா மையங்களை அமைப்பது என்பது ‘கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கிய கதை'யாகத்தான் உள்ளது. பணம் காசு இல்லாமல் இயற்கையின் அழகை ரசிக்க எத்தனையோ இடங்கள் இருந்தும், அவற்றை வளர்ச்சி, நாகரிகம் என்ற பெயரில் நாசப்படுத்திவிட்டு, காசைக் கொட்டிக் கொடுத்துச் சில நிமிடங்கள் மட்டும் இயற்கையை அனுபவிப்பது வேதனையானது.
-ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.