மக்கள்தொகைப் பெருக்கத்துக்கும் உணவுத் தேவைக்குமான விகிதாச்சாரம் நேர்எதிர் விகிதத்தில் இருக்கும் என மால்த்துசியன் மக்கள்தொகைக் கோட்பாடு கூறுகிறது. அதே சமயம், தேவையே கண்டுபிடிப்புகளின் தாய் என்றும் ஒரு அறிஞர் கூறுகிறார்.
தேவைக்கும் உணவு உற்பத்திக்குமான போராட்டத்தில் தற்போது விளைநிலங்களும் காணாமல் போவதுதான் சிக்கலை மேலும் சிக்கலாக்குகிறது. மேலும், அறிவியல் முறையைக் கடைப்பிடிக்காத பண்டைய விவசாயத்தின் மூலம் உற்பத்தி செய்யப்பட உணவுப் பயிர்கள் மனிதர்களுக்கு வலுவூட்டக்கூடியதாகவும், நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டதாகவும் இருந்தது.
தற்போதைய விவசாய உற்பத்திப் பொருட்கள் பசியை ஆற்றுப்படுத்தும் ஒரு காரணியாக மட்டுமே இருக்கிறது. உணவே மருந்தாக இருந்த காலம் போய், இப்போது மருந்தையையே உணவாகக் கொள்ளும் காலத்தில் இருக்கிறோம். வணிகப் பயன்பாட்டுக் காரணியாய் அறிவியலைப் பயன்படுத்தாமல், மக்கள் பயன்பாட்டுத் தேவைகளுக்கு அறிவியலைப் பயன்படுத்தினால் மனித வாழ்வு மேன்மைபெறும்.
- எஸ். சிவகுமார்,சென்னை.