இப்படிக்கு இவர்கள்

கட்சிக்கு அவப்பெயர்?

செய்திப்பிரிவு

‘நீங்கள் பேசாமலேயே இருந்திருக்கலாம் ஹேமமாலினி’ என்கிற தலையங்கம் படித்தேன். பாஜகவினர் பேசும் வார்த்தைகளுக்கு மறுப்புத் தெரிவிப்பதற்கெனத் தனியாக ஒருவரை நியமிக்க வேண்டிய அளவுக்கு ஒவ்வொருவரும் எதையாவது பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

ஹேமமாலினியின் இந்தப் பேச்சை, கருத்துச் சுதந்திரம் என்று சொல்லித் தப்பிக்க முடியாது. நாட்டு மக்களைப் பற்றி இழிவாகப் பேசியதை எந்தவொரு இந்தியரும் ஏற்றுக்கொள்ள மாட்டார். தேவையில்லாதவற்றைப் பேசி பிரச்சினை என்றாகி, அவை கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தி விடும் என்பதால் பிரதமர் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

- வீ. சக்திவேல்தே.கல்லுப்பட்டி.

SCROLL FOR NEXT