முதன்முதலாக மகாராஷ்டிர மாநிலத்தில்தான் விநாயக சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. பாலகங்காதர திலகர்தான் விநாயகர் சிலைகளைப் பொதுஇடங்களில் ஊர்வலமாகக் கொண்டுசெல்லும் வழக்கத்தை ஏற்படுத்தினார். காலப்போக்கில், அந்த விழா சாதி பேதங்களற்று மக்களை ஒருங்கிணைக்கும் விழாவாக இந்தியா முழுவதும் பரவியது. என்றாலும், விழாவின் முக்கிய அம்சமான சிலை கரைப்பின் ஆபத்து நம்மைப் பயமுறுத்துகிறது.
அன்பர்கள் தாங்கள் அறியாமலேயே சூழல் சீர்கெடத் துணைபோகின்றனர். நீர்நிலைகளும் சூழலும் மாசடைந்திருக்கும் இக்காலத்தில், செயற்கைப் பொருட்களால் தயாரிக்கப்படும் சிலைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது வேதனையைத் தருகிறது. இயற்கையை மறவாமல் இருக்கவே நம் முன்னோர்கள் கடவுளர்களையும் வழிபாட்டையும் நமக்கு அறிமுகப்படுத்தினர்.
அவ்வகையில், களிமண் அல்லது சாணியால் உருவாக்கப்படும் விநாயகரே சிறந்தவர். விநாயகர் சதுர்த்தி நெருங்கும் சமயத்தில் ‘கரையாத சிலைகளால் குறையாத ஆபத்து’ என்ற நடுநிலையான கட்டுரையை வெளியிட்ட ‘தி இந்து’வுக்குப் பாராட்டுகள்.
- முருகவேலன், படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை.