‘தர்மம் நிச்சயம் வெல்லும், இறுதியிலாவது’ தலையங்கம் கண்டேன். நீதி எப்போதும் தாமதமாகக் கிடைக்கும் என்பார்கள். 10 ஆண்டுகளுக்குப் பிறகு வழங்கிய தீர்ப்பில், மொட்டுக்கள் கருகக் காரணமாக இருந்தவர்கள் சட்டத்திலிருந்து வேண்டுமானால் தப்பியிருக்கலாம்.
குழந்தைகளை இழந்து கதறிய பெற்றோர்களின் கண்ணீருக்கு அவர்கள் பதில் சொல்லியே தீர வேண்டும். அரசன் அன்று கொல்வான்… தெய்வம் நின்று கொல்லும் என்பது நிதர்சனமான உண்மை.
- மு.க. இப்ராஹிம், வேம்பார்.