‘பெண் இன்று’ இணைப்பிதழில் வெளியான ‘கீரை விற்கும் பள்ளி மாணவி’ கட்டுரை வாசித்தேன். தனக்கு விருப்பமான ஆடம்பரப் பொருட்களையும், விதவிதமான உடைகளையும், புதிய ரக கைபேசியையும் வாங்கித் தர மறுக்கும் பெற்றோர்களிடம் கோபித்துக்கொண்டும், குடும்ப வறுமையைக் காரணம் காட்டி படிப்புக்கு முழுக்குப்போடும் மாணவ-மாணவிகளுக்கு மத்தியில், மூன்று பெண் குழந்தைகளைப் படிக்க வைப்பதற்கான பெற்றோரின் பொருளாதாரச் சுமையை ஒருதோளிலும், புத்தகப் பையை மறு தோளிலும் பங்கிட்டுச் சுமப்பதைப் பெருமையாகக் கருதும் விண்ணரசி, தான் கொண்டிருக்கும் வைராக்கியத்திலும் படித்துக்கொண்டிருக்கும் 10-ம் வகுப்பில் மாநில அளவில் முதலிடம் பெற்றுச் சாதிக்கவும் வாழ்த்துகள்.
- ஜத்துஜஸ்ரா, கொடைக்கானல்.