‘இந்த அழிவு ஒரு ஊருக்கானது மட்டுமா?' கட்டுரையில் வெளியான தகவல்கள் குறித்து எங்கள் விளக்கம்:
டி.சி.டபிள்யூ. நிறுவனம் கடலில் எந்தவிதக் கழிவுகளையும் வெளியேற்று வதில்லை. மேலும், உலகத் தரக் கொள்கையான மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாடு என்ற கொள்கையைக் கடைப்பிடிப்பதுடன், அதிநவீனத் தொழில்நுட்பம் வாய்ந்த நேனோ மற்றும் மாறுநிலை சவ்வூடு பரவுதல் மற்றும் பூஜ்யநிலைக் கழிவுநீர் வெளியேறும் ஆலையாக எங்கள் ஆலை திகழ்கிறது.
மேலும், இவ்வாறு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை மறுசுழற்சி மூலம் மீண்டும் உற்பத்திக்குப் பயன்படுத்துகிறது. கட்டுரையோடு வெளியான சில படங்கள் எங்கள் நிறுவனத்தை எதிர்ப்பவர்களால் எடுக்கப்பட்டவை. அதேபோல், சுற்றியுள்ள பகுதியில் உடல்நலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உள்ளன என்று குறைகூறுபவர்களுக்கு, டி.சி.டபிள்யூ. நிறுவனம் எந்த வழியிலும் பொறுப்பல்ல என்று தெரிவித்துக்கொள்கிறோம்.
- இரா. ஜெயக்குமார், நிர்வாக உதவித் தலைவர் (பணியகம்), டி.சி.டபிள்யூ. ஆலை, சாஹுபுரம், தூத்துக்குடி மாவட்டம்.