இப்படிக்கு இவர்கள்

ஆனந்தம் அளியுங்கள்

செய்திப்பிரிவு

கற்றல் நன்றுதான்; ஆனால், உயிரைப் பணயம் வைத்து குஜராத் மாநிலத்தில், சஜ்ஜன்புரா கிராமத்தில், ஹிரன் ஆற்றில் அன்றாடம் பயணம் செய்து கற்றல் நன்று என்று ஒருபோதும் சொல்ல முடியாது. உயிர் இருந்தால்தானே வாழ்வில் உயர்வு தரும் கல்வியைக் கற்க முடியும்? சிறு பையன்கள் உடையைக் கழற்றிக் குடத்தினில் வைத்து, கரை ஏறிய பின்பு மறுபடியும் உடை அணிந்து செல்லும் புகைப்படம் கண்டு மனம் வலித்தது. வெட்ட வெளியினில், ஆற்று ஓரத்தில் பள்ளிச் சீருடையோடு நிற்கும் பரிதாபத்துக்குரிய மாணவிகளின் கையறு நிலை கண்களில் நீரை வரவழைத்தது.

வானத்தையே கூரையாக்கி உடை மாற்ற முடியுமா? அல்லது வடிந்து ஒழுகும் நீரோடுதான் பள்ளிக்குச் செல்ல முடியுமா? 67 வருட சுதந்திரம் என்ன தந்திருக்கிறது? குஜராத் முதல்வரே! நீங்களே ஒரு ஆசிரியையாக இருந்தவர்தானே! ஹிரன் ஆற்றைக் கடக்க மாணவச் செல்வங்களுக்காகப் பாலம் ஒன்றைக் கட்டித் தந்து, அவர்கள் வாழ்க்கையில் ஆனந்தத்தை அளிக்கக் கூடாதா?

- செல்வகுமாரி, புதுச்சேரி.

SCROLL FOR NEXT